சாலையை மறைக்கும் செடிகள் - வாகன ஓட்டிகள் 'திக்... திக்'"

ஏரிக்கரையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் வளர்ந்துள்ள எருக்கஞ்செடிகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை வேண்டும்என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-04-08 03:04 GMT

சாலையோரம்  வளர்ந்துள்ள எருக்கஞ்செடிகள் 

காஞ்சிபுரம் மாநகராட்சி 22வது வார்டு, திருக்காலிமேடில் இருந்து, சின்ன காஞ்சிபுரம் பகுதிக்கு செல்வோர் 23வது வார்டு, நேதாஜி நகரை ஒட்டியுள்ள அல்லாபாத் ஏரிக்கரை சாலை வழியாக சென்று வருகின்றனர். வாகன போக்குவரத்து அதிகம் நிறைந்த இச்சாலை வளைவில், போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் எருக்கஞ்செடிகள் வளர்ந்துள்ளன. சாலையை மறைக்கும் இச்செடிகளால், எதிரே வாகனங்கள் அறிய முடியாத நிலை உள்ளது. இதனால், விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.

மேலும், கனரக வாகனம் செல்லும்போது, இச்செடிகளின் கிளை ஒடிந்து, அதிலிருந்து வடியும் எருக்கம் பால் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகளில் கண்களில் விழுந்தால், கண் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, நேதாஜி நகர், அல்லாபாத் ஏரிக்கரையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் வளர்ந்துள்ள எருக்கஞ்செடிகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை வேண்டும்என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். "

Tags:    

Similar News