தரைப்பாலம் சீரமைக்காததால் தேர்தலை புறக்கணித்து வைக்கபட்ட பிளக்ஸ்
உலகுடையார்பாளையத்தில் தரைப்பாலம் சீரமைக்காததை கண்டித்து நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக கூறி, பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நத்தக்காடையூர் அருகே உலகுடையார் பாளையம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊரின் அருகில் கீழ்பவனி பாசன உபரிநீர் செல்லும் ஓடை உள்ளது. இந்த ஓடையின் குறுக்கே தலைப்பாளம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. நத்தக்கடையூர் திருப்பூர் சாலையில் சிவசக்திபுரம் பஸ் நிறுத்தத்தில் இருந்து உலகுடையார் பாளையம் செல்லும் கிராம பொதுமக்கள் இந்த தரைபாலத்தின் வழியாக கடந்து செல்ல வேண்டும். இந்த தலைப்பாலம் பலதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று கிராம பொது மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் கிராம பொதுமக்கள் தரைப் பலத்தை சீரமைக்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பதாக காங்கேயம் நத்தக்கடையூர் பிரதான சாலையில் வெள்ளியங்காடு பஸ் நிறுத்தத்தில் அறிவிப்பு பதாகை வைத்தனர். இது பற்றி தகவல் அறிந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி சதீஷ்குமார் அதிகாரிகள் குழுவினர் காவல் துறையினர் உதவியுடன் பொதுமக்களும் பேச்சுவார்த்தை நடத்தி எவ்வித பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லாத சூழ்நிலையில் அங்கு வைக்கப்பட்டிருந்த தேர்தல் புறக்கணிப்பு பேனரை அப்புறப்படுத்தினர்.