திருத்தணியில் நகராட்சி ஆணையர் தலைமையில் பிளாஸ்டிக் பறிமுதல்
திருத்தணியில் நகராட்சி ஆணையர் அருள் தலைமையில் பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது.
திருத்தணி நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன இதில் மருத்துவமனைகள் தனியார் பள்ளி கல்லூரிகள் குடியிருப்புகள் வணிக வளாகங்கள் கோவில்கள் என உள்ளது தற்போது திருத்தணி நகராட்சியில் குப்பைகள் அதிகரித்து வருவதால் இதற்கு காரணமான பிளாஸ்டிக் வைப்பதற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி நேற்றைய தினம் திருத்தணி நகராட்சி ஆணையர் அருள் தலைமையில் மேலாளர் ஹரிபாபு பொது சுகாதாரத்துறை உதவி அலுவலர் காமேஸ்வரன் எஸ் பி எம் சண்முகம் அதிரடியாக சோதனை நடத்தி திருத்தணி மாபோசி சாலை அரக்கோணம் சாலை ஆகிய பகுதிகளில் இருந்து கடைகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு இருந்த பிளாஸ்டிக் டம்ளர், கவர், பைகள், பிளாஸ்டிக் ஸ்பூன், மொத்தம் 200 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.
இதற்கு அபராதமாக ரூபாய் 6000 அபராதம் விதிக்கப்பட்டு மேலும் தொடர்ந்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது