சர்வதேச காடுகள் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு

நத்தம் அருகே மூங்கில்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் சர்வதேச காடுகள் தினத்தை முன்னிட்டு புதன்கிழமை உறுதிமொழி எடுத்துக் கொண்டு மரங்கள் நட்டனர்.

Update: 2024-03-21 14:35 GMT

நத்தம் அருகே மூங்கில்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் சர்வதேச காடுகள் தினத்தை முன்னிட்டு புதன்கிழமை உறுதிமொழி எடுத்துக் கொண்டு மரங்கள் நட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள மூங்கில்பட்டி அரசு உயர்நிலைபள்ளியில் பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய, கிராமப்புற வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் நத்தம் குழு மாணவர்கள் சார்பில் (மார்ச் 21) சர்வதேச காடுகள் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு காடுகளின் முக்கியத்துவத்தையும் அவற்றைக்காக்கும் வழிமுறைகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் காடுகலை பாதுகாக்கவும் விரிவுபடுத்தவும் உறுதிமொழி எடுத்துக்கொண்டு பள்ளி வளாகத்தில் மரங்கள் நட்டனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரிய ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News