இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பிளஸ் 1 மாணவர் உயிரிழப்பு
கடமலைகுன்று பகுதியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பிளஸ் 1 மாணவர் உயிரிழப்பு.;
Update: 2024-03-18 09:45 GMT
ஜிஜிமோன்
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பிலாங்காலையை சேர்ந்தவர் ஜெபஸ்டீபன். அவரது மகன் ஜிஜிமோன். பிளஸ்1 வகுப்பு பயின்று வந்தார். இதற்கிடையே நேற்று இரவு தெற்கு கைலாசவிளையை சேர்ந்த தனுஸ் என்பவருடன், டியூசனுக்கு சென்றார். பின்னர் டியூஷன் முடிந்து பைக்கில் வீடு திரும்பி உள்ளனர். அப்போது சாமிவிளையை சேர்ந்த ஜார்ஜ் ஜெகன் என்பவரும் பைக்கில் வந்து உள்ளார். எதிர்பாராதவிதமாக 2 பைக்குகளும்நேருக்கு நேர் மோதிக் கொண்டன. அப்போது 3 பேரும் தூக்கி வீசப் பட்டு படுகாயமடைந்தனர். இதில் படுகாயமடைந்த ஜிஜிமோன் தக் கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவம னைக்கு கொண்டு செல்லப்பட் டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக ஜிஜிமோன் இறந்து போனார். விபத்தில் காயமடைந்த தனுஷ் திருவனந்தபுரத்தில் உள்ளதனியார் மருத்துவமனைக்கும், ஜார்ஜ் ஜெகன் சுங்கான்கடையில் உள்ள தனியார் மருத்து வமனையிலும் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்து குறித்து, ஜார்ஜ் ஜெகன் மனைவி கிரிஜா மோன் தக்கலை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் இன்று காலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.