பிளஸ் 1 மாணவி மாயம்

பொம்மிடியை சேர்ந்த பிளஸ் 1 மாணவி படிக்கும் 17 வயது சிறுமி, கடந்த இரண்டு நாட்களுக்கு முன் காணாமல் போன நிலையில், போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2024-01-01 10:55 GMT

பொம்மிடியை சேர்ந்த பிளஸ் 1 மாணவி படிக்கும் 17 வயது சிறுமி, கடந்த இரண்டு நாட்களுக்கு முன் காணாமல் போன நிலையில், போலீசார் தேடி வருகின்றனர்.

பாப்பிரெட்டிப்பட்டி, ஜன.1: பொம்மிடி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, அங்குள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். அரையாண்டு விடுமுறையை என்பதால், வீட்டில் இருந்த மாணவி கடந்த 2 நாட்களுக்கு முன் மாயமானார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பொம்மிடி போலீசில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அதில் அதே பகுதியைச் சேர்ந்த லெனின் ஆபிரகாம் என்ற வாலிபர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News