கன்னியாகுமரியில் இன்று 2ம் நாள்   சூரிய உதயம் பார்த்த பிரதமர் மோடி

கன்னியாகுமரிக்கு வந்துள்ள பிரதமர் மோடி இன்று 2ம் நாளாக தொடர்ந்து சூரிய உதயத்தை கண்டு ரசித்தார்.

Update: 2024-06-01 06:37 GMT

கன்னியாகுமரிக்கு வந்துள்ள பிரதமர் மோடி இன்று 2ம் நாளாக தொடர்ந்து சூரிய உதயத்தை கண்டு ரசித்தார்.  

பாரத பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரிக்கு நேற்று முன்தினம் வருகை தந்தார். அன்று மாலை கன்னியாகுமரி பகவதியம்மனை தரிசித்து, விவேகானந்தர் பாறையில் 3 நாள் தியானத்தை பிரதமர் மோடி அன்று இரவு தொடங்கிய நிலையில் நேற்று (மே.31) 2-வது நாளாக அவர் தியானத்தைத் தொடர்ந்தார்.

முன்னதாக நேற்று காலை, கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து சூரிய உதயத்தை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார்.      இன்று (1-ம் தேதி)  மூன்றாவது நாளாக காலை விவேகானந்தர் நினைவு மண்டப வளாகத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்ட பின்னர் கடலில் இருந்து எழும் சூரிய உதயத்தை கண்டு சூரிய நமஸ்காரம் செய்தார்,

அதனை தொடர்ந்து தியான மண்டபத்திற்குள் சென்ற அவர் மீண்டும் தியானத்தில் ஈடுபட்டு வருகிறார். மாலை 4 மணி அளவில் தியானத்தை நிறைவு செய்யும் பிரதமர், படகு மூலம் கன்னியாகுமரி கரைக்கு வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து விமானம் மூலமாக டெல்லி திரும்புகிறார்.

Tags:    

Similar News