பிரதமர் மோடி பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் -  அமைச்சர்

வெறுப்புணர்வை தூண்டும் வகையில் மேற்கொள்ளும் பிரதமரின் பிரச்சாரங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-04-13 06:52 GMT
அமைச்சர் மனோதங்கராஜ்

தமிழக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஒரு அறிக்கை வெளியிட்டார் அதில் அவர் கூறியிருப்பதாவது, பாரதிய ஜனதா கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்து வரும் நிலையில், மிகவும் பொறுப்பாகவும் கண்ணியத்துடனும் மேடைகளில் பேச வேண்டிய பிரதமர் மோடி, தேர்தல் பிரச்சாரங்களில் மதப் பிரச்சாரகர்ளை போல சட்டத்தை மீறி பேசி வருகிறார்.

குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் பேசுகையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் அறிக்கை போல் இருப்பதாக பேசினார். சேலத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது இந்து தர்மத்தின் வழிபாடான சக்தியை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள் என்றார். இப்படியாக பிரதமர் மோடி முழுக்க முழுக்க மதத்தையும் சாதியை முன்வைத்து மக்களிடைய வெறுப்புணர்வை தூண்டும் செயலையே தொடர்ந்து செய்து வருகிறார்.

பிரதமரின் பேச்சுகள் மீது தேர்தல் ஆணையம் தானாகவே முன்வந்து நடவடிக்கை எடுக்காதது ஏன்? தேர்தல் ஆணையம் பாரதிய ஜனதாவின் கூட்டணி கட்சியாக செயல்படாமல் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு பாரபட்சம் இன்றி சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுடன், இந்தியாவில் 2024 மக்களவைத் தேர்தல் முடிவு வரை அவர் பிரச்சாரங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News