பா.ம.க. வேட்பாளர் சாமி தரிசனம்!
திருவண்ணாமலை மாவட்டம், ஏம்பல் பாலமுருகன் கோவிலில் பாமக வேட்பாளர் தேரை இழுத்து பொது மக்களிடம் ஓட்டு சேகரித்தார்.
Update: 2024-03-24 12:53 GMT
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த ஏம்பலம் கிராமத்தில் பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நடைபெற்று வரும் பங்குனி உத்திர விழாவில் பா.ம.க. வேட்பாளர் கணேஷ்குமார் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் மாம்பட்டு முத்துமாரியம்மன் கோவில் உபாசகர் லட்சுமணன் சுவாமி கணேஷ்குமாருக்கு மாலை அணிவித்து அருளாசி வழங்கினார். இதில் பா.ம.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.பின்னர் பாலமுருகன் தேரை இழுத்து பொதுமக்களிடம் வேட்பாளர் கணேஷ்குமார் ஓட்டு சேகரித்தார்.