அரசு மதுபானக் கடையை அகற்ற கோரி பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஊத்தங்கரை அருகே அரசு மதுபானக் கடையை அகற்ற கோரி பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-03-08 09:51 GMT

கண்டன ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அம்மன் கோவில்பதி பிரிவு சாலையில் உள்ள அரசு மதுபானக் கடையை அகற்ற கோரி, பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் குமார், சந்திரன், வெள்ளி அரசு, அருன்,முனிய்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சமூகநீதி பேரவை மாநில துணை தலைவர் மூர்த்தி கலந்துக்கொண்டு பேசுகையில், தமிழகத்தில் திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும். அனைத்து குற்ற செயல்களுக்கும் காரணமாக இருக்கும் மதுவை அடியோடு ஒழிக்க வேண்டும் என கோசமிட்டனர். இதில் வன்னியர் சங்க துணைத் தலைவர் வரதராஜன், பொன்னப்பன் மற்றும் பாமக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமையிலான போலீஸôர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News