பா.ம.க., ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் பல்வேறூ கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ம.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது;
கள்ளக்குறிச்சியில் பல்வேறூ கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ம.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது
கள்ளக்குறிச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ம.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது
.கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, நகர செயலாளர் பிரபு தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் ராஜா, அய்யப்பன், அன்பரசன், பாலு, ராஜா, வேல்முருகன் முன்னிலை வகித்தனர். நகர அமைப்பு செயலாளர் காரல் மார்க்ஸ் வரவேற்றார். நகர தலைவர் சீனு, மாநில செயற்குழு உறுப்பினர்கள் வடிவேல், ராமு தொடக்க உரையாற்றினார். மாநில இளைஞர் சங்க செயலாளர் செந்தில், மாவட்ட செயலாளர் தமிழரசன் கோரிக்கைகளை விளக்கி கண்டன உரையாற்றினர். கள்ளக்குறிச்சி நகராட்சியில் குப்பைகளை தரம் பிரிக்கும் டெண்டர், வாகனங்களுக்கு செலவிடப்படும் டீசல் ஆகியவற்றில் ஊழல், மணல் திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை வலியுறுத்தியும், இதற்கு உடந்தையாக செயல்படும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆளுங்கட்சி பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் கோவிந்தராசு, அமைப்பு செயலாளர் பப்லு, முன்னாள் மாவட்ட செயலாளர் சரவணன், முன்னாள் மாநில துணை பொதுச் செயலாளர் ரமேஷ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் சிவராமன், சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர். நகர துணைச் செயலாளர் அஜய் நன்றி கூறினார்.