16 வயது சிறுமியை திருமணம் செய்த கொத்தனார் மீது போக்சோ வழக்கு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்த கொத்தனாரை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

Update: 2024-05-17 16:33 GMT

போக்சோ வழக்கு 

 விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 11 ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவி ஒன்ரறை மாதங்களுக்கு முன்பு தேர்வு எழுத பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. சிறுமி தேர்வு எழுதி முடித்துவிட்டு வீட்டிற்கு வராததால் சிறுமியின் தாய் தந்தை அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

விசாரணை செய்ததில் மாணவி தேர்வு எழுதி முடித்துவிட்டு ஆட்டோவில் ஏறி சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனது மகளை கண்டுபிடித்து தர சிறுமியின் தாய் ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மாயமான 16 வயது சிறுமியை தேடி வந்தனர்.

காவல்துறையினர் தீவிர விசாரணையில் சிறுமி சிவகாசி அருகே விஸ்வநத்தம் பகுதியில் திருமணம் செய்து கொத்தனாருடன் வசித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அங்கு சென்று விசாரணை செய்ததில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நிறைமதி பகுதி கீழத்தெருவை சேர்ந்த ஏற்கனவே திருமணமான கணேசமூர்த்தி வயது 25 என்ற இளைஞர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கொத்தனார் வேலை செய்து வந்த நிலையில் இவர் சிறுமியை காதலிப்பது போல் நடித்து தனக்கு திருமணம் ஆனதை மறைத்து ஆசை வார்த்தைகள் கூறி 16 வயது சிறுமியை மறுமணம் செய்து சிவகாசி அருகே விஸ்வநத்தம் பகுதியில் ஒரு வீட்டில் வைத்து குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

அங்கு சென்ற காவல்துறையினர் கொத்தனார் கணேசமூர்த்தியை கைது செய்து அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News