சிறுமியிடம் சிறுமிஷம்.வாலிபர் மீது போக்சோ வழக்கு
அழகியமண்டபம் பகுதியில் 8 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர் மீது போக்சோ வழக்கு பதிவு.;
Update: 2024-03-17 09:59 GMT
காவல்துறை விசாரணை
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட நட்டாலம் பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவர். மனைவி மற்றும் 8 வயது மகளை பிரிந்து சென்றார். அதன்பிறகு 8 வயது சிறுமி, தனது தாயாருடன் அழகியமண்டபம் பகுதியில் பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். அவள், அப்பகுதியில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார்.அதே பகுதியில் வசிப்பவர் ஜெகதீஷ்.இவர் சிறுமியின் தாத்தாவுடன் வேலைக்குச் சென்று வந்தார். இந்த நிலையில் வீட்டில்சிறுமி தனியாக இருந்த போது அங்கு வந்த ஜெகதீஷ், சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் சிறுமி அழுதுள்ளார்.இது குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஷகிலா பானு வின் பரிந்துரையின் பேரில் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் ஜெகதீஷ் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.