மயிலாடுதுறையில் போக்சோ வழக்கு பதிவு
மயிலாடுதுறையில் போக்சோ சிறைப்பறவைமீது மீண்டும் போக்சோ மற்றும் குழந்தை திருமண தடைச்சட்டம் பாய்ந்தது.
மயிலாடுதுறை அருகே உள்ள பெரம்பூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது கொண்ட சிறுமி ஒருவர் வயிற்றுவலி என்றுகூறி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார், அவரை பரிசோதித்போது 3மாத கர்ப்பமாக உள்ளது தெரியவந்தது.
உடனடியாக மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது, மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் நாகவள்ளி மருத்துவமனை சென்று அந்த சிறுமியை விசாரித்தபோது, 2019ஆம் ஆண்டு இந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கர்ப்பமாக்கிய பெரம்பூர் நெய்வாசல் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் மகன் ரஞ்சித் என்பவரை போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவுசெய்து சிறையில் அடைத்தனர்.
2019 ஆம் ஆண்டிலேயே அந்த சிறுமிக்கு ஒரு பெண்குழந்தை பிறந்தது. இதற்கிடையே ஜாமீனில் வெளியே வந்த ரஞ்சித் அந்த சிறுயின் வீட்டிற்குச் சென்று சிறுமிக்கு தாலியைக் கட்டி குடும்பம் நடத்த ஆரம்பித்துவிட்டார் அதன் விளைவாகத்தான் அந்த சிறுமி தற்பொழுது 3 மாத கர்ப்பம் என தெரியவந்தது.
ரஞ்சித்தை தேடி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் நாகவள்ளி மற்றும் போலீசார் சென்று பார்த்தபோது ரஞசீத் தலைமறைவாகிவிட்டார் இதுகுறித்து ரஞ்சித்மீது குழந்தை திருமணத்தடைச் சட்டமும் போக்சோ சட்டமும் பாய்ந்தது. சிறுமிக்கு தொந்தரவு அளித்து இரண்டுமுறை போக்சோ சட்டத்தின்கீழ் நடவடிக்கைக்கு ஆளான செய்தி மயிலாடுதுறை மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.