திமுக சார்பில் கவிதை ஒப்புவித்தல் போட்டி
திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நாடார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த கவிதைகள்,திரைப்பட வசனங்கள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.;
Update: 2024-02-11 08:10 GMT
விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான மேல்நிலை உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்கும் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் கவிதைகள் திரைப்பட வசனங்கள் ஒப்பித்தல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ ஆர் ஆர் சீனிவாசன் கலந்துகொண்டு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாநில செயலாளர் கலை இலக்கியத்தின் பகுத்தறிவு பேரவை திருவிடம் கலந்து கொண்டு தலைமை தாங்கினார் மேலும் ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர் 80 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு எம்எல்ஏ சீனிவாசன் பரிசுகள் வழங்கினார்