சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவர் கைது - காவல்துறையினர் நடவடிக்கை
240 மது பாட்டில்கள் பறிமுதல்;
Update: 2023-11-28 03:53 GMT
சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுப்பட்டவர் கைது
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை தாலுக்கா காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் சரவணன். இவர் தெற்கு தமராக்கி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன் மகன் பாலதண்டாயுதம் என்பவர் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட்தை கண்டறிந்தார். அதனை அடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்து 240 மது பாட்டில்கள் மற்றும் ரூபாய் 1500 பணத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.