சூதாட்டம் விளையாடிய நபர்களை கைது செய்த காவல்துறையினர்
ஆலாந்துறை காவல் நிலைய பகுதியில் அமைந்துள்ள தனியார் தோட்டத்தில் சட்டத்திற்கு விரோதமாக வெட்டாட்டம் என்னும் சூதாட்டம் விளையாடிய ஏழு நபர்களை கைது செய்த போலீசார்.;
By : King 24x7 Angel
Update: 2024-01-25 09:37 GMT
சூதாட்டம் விளையாடிய நபர்களை கைது செய்த காவல்துறையினர்
கோவை:ஆலாந்துறை காவல் நிலைய பகுதியில் அமைந்துள்ள தனியார் தோட்டத்தில் வெட்டாட்டம் எனும் சூதாட்டம் நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் சட்டத்திற்கு விரோதமாக வெட்டாட்டம் என்னும் சூதாட்டம் விளையாடிய ஏழு நபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து மூன்று இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் 2,51,000 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிட்டதக்கது.