மாநில தடகள போட்டியில் பதக்கம் வென்ற காவலர்களுக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு
மதுரை மாநகரை சேர்ந்த காவலர்களை மாநகர கமிஷ்னர் பாராட்டினார்;
Update: 2023-12-21 09:54 GMT
பதக்கம் வென்றவர்களுக்கு பாராட்டு
தமிழ்நாடு 41வது மாநில மூத்தோர் தடகள போட்டிகள் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் தென்மண்டல காவல்துறை அணி சார்பில் மதுரை மாநகரைச் சேர்ந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் சி.டி.சிதம்பரம் (மதிச்சியம் காவல் நிலையம்) 400 மீட்டர், 110 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தில் வெள்ளி பதக்கங்களும், ஈட்டி எறிதலில் வெண்கல பதக்கமும், மதிச்சியம் போக்குவரத்து போலீஸ் ஏட்டு செந்தில்குமார் உயரம் தாண்டுதலில் வெள்ளி பதக்கமும் வென்றனர். இதேபோல், மதிச்சியம் போக்குவரத்து முதன்மை காவலர் இளையராஜா 800 மீட்டர், 1500 மீட்டர் ஓட்டப்பத்தில் வெள்ளி, வெண்கல பதக்கங்களும், ஆயுதப்படை முதன்மை பெண் காவலர் தங்கபெனிலா 400 மீட்டர், 800 மீட்டர் ஓட்டத்தில் இரு தங்க பதக்கங்களும் வென்றனர். வெற்றிபெற்ற அனைவரையும் மதுரை மாநகர் போலீஸ் கமிஷனர் லோகநாதன் நேரில் அழைத்து பாராட்டி, வாழ்த்துக்களை தெரிவித்தார்.