அரசு ஊழியர்களை குறிவைத்து ஏமாற்றிய அரசு ஆசிரியர்கள்; விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!!
கோபிசெட்டிபாளையம் அருகே அரசு ஊழியர்களிடம் பல கோடி ரூபாய் பண மோசடி செய்த 3 அரசு ஆசிரியர்களை காவல்துறையின் கைது செய்து சிறையில் அடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வண்ணாந்துறை புதூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு பள்ளியில் இடைநிலை ஆசிரியராக உள்ள பிரபா, பிச்சாண்டபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றும் மங்கள லட்சுமி, மற்றும் காளி செட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற குளோரி ஆகிய மூவரும் தன்னுடன் பணிபுரியும் சக ஆசிரியர்களிடமும் அவர்கள் மூலம் பழக்கமான ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலக ஊழியர்களிடமும் தாங்கள் ஏலச்சீட்டு நடத்துவதாக கூறியுள்ளனர். மேலும் பல ஆசை வார்த்தைகளை கூறி அவர்களை சீட்டில் சேர வைத்துள்ளனர். முதல், இரண்டு ,மூன்று மாதங்கள் என தவறாமல் ஏலம் நடத்துவதாக கூறி ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு இடத்தில் வைத்து ஏலத்தை நடத்தியுள்ளனர். 4,5 மாதங்களுக்கு பிறகு ஏலமும் நடத்தாமல், பணமும் தராமல் இருந்தது பணத்தைக் கட்டியவர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது .ஏலத் தொகையை கட்டியவர்கள் பணத்தைக் கேட்டு வீட்டிற்குச் சென்றால் தங்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக காவல்துறையில் புகார் அளித்து விடுவோம் என்று மிரட்டி அவர்களை திருப்பி அனுப்பியுள்ளனர். இதை அடுத்து இவர்கள் மீது பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளனர். அதன்பேரில், போலீஸார் விசாரணை மேற்கொண்ட போது, இவர்கள் மீது பதினைந்துக்கும் மேற்பட்ட நீதிமன்ற வழக்குகளும் உள்ளதும், இவர்கள் பல குற்ற வழக்குகளிலும் தேடப்படும் குற்றவாளியாக இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதனிடையே இவ்வளவு குற்ற செயல்களில் ஈடுபட்ட பிரபா, மங்களலட்சுமி, குளோரி ஆகியோர் மீது இதுவரை கோபி வட்டார கல்வி அலுவலர்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது பெரும் கேள்விக்குறியாகி உள்ளது என மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவிலும் கல்வித்துறை உயர் அதிகாரிகளிடமும் இவர்கள் மீது பல புகார் கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில் கோபி காவல்துறையினர் பிரபா, குளோரி ஆகியோரை கோபி காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் முக்கிய குற்றவாளியான பிரபாவின் மீது ஒரு கோடி 60 லட்சம் ரூபாய் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு தற்போது நிபந்தனை ஜாமினில் வெளிவந்து தினசரி கோபி காவல் காவல் நிலையத்திற்கு சென்று கையழுத்திட்டு வருகிறார். இதேபோல் குளோரி நிபந்தனை முன் ஜாமின் பெற்று தினசரி கோபிகாவல் நிலையத்திற்கு சென்று கையெழுத்திட்டு வருகிறார். மங்கல லட்சுமி பெயரிலும் காசோலை வழக்கில் பிடிவாரண்ட் உள்ளது. ஏழை எளிய மக்களையும், ஓய்வூதியம் பெற்று வருபவர்களையும், அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் பல கோடி ரூபாய் ஏமாற்றி சட்டவிரோதமாக சொத்து சேர்த்து இருக்கும் மங்களலட்சுமி, குளோரி, பிரபா ஆகியோரை காவல்துறை துரித விசாரணை மேற்கொண்டு ஏமாந்தவர்களுக்கு நீதியும் அவர்களின் பணத்தையும் திரும்ப பெற்றுத் தர வேண்டும் என்பதே புகார் அளித்தவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.