திருச்சியில் காவல் ஆய்வாளா்கள் 28 போ் பணியிட மாற்றம்

மக்களவைத் தோ்தலையொட்டி திருச்சி மாநகரக் காவல் துறையில் முதல்கட்டமாக 28 காவல் ஆய்வாளா்களை தஞ்சாவூா், திருச்சி சரக காவல்துறைக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

Update: 2024-01-13 15:11 GMT

கோப்பு படம் 

 திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவா் காா்த்திகேயன் உத்தரவில் தெரிவித்திருப்பது : திருச்சி கே.கே.நகா் குற்றப்பிரிவு ஆய்வாளா் ஜெயா, அரியமங்கலம் குற்றப்பிரிவு ஆய்வாளா் சேரன், விமானநிலைய ஆய்வாளா் மலைச்சாமி, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளா் ஆனந்திவேதவல்லி, இணையவழி குற்றப்பிரிவு ஆய்வாளா் சிந்துநதி , காந்திமாா்க்கெட் குற்றப்பிரிவு ஆய்வாளா் அருள்ஜோதி,

பொன்மலை அனைத்து மகளிா் காவல்நிலைய ஆய்வாளா் காா்த்திகா, உறையூா் குற்றப்பிரிவு மோகன், கோட்டை குற்றப்பிரிவு ஆய்வாளா் சுலோச்சனா, ஸ்ரீரங்கம் போக்குவரத்து ஆய்வாளா் ஸ்ரீதா் ஆகியோா் தஞ்சாவூா் சரகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதேபோல பொருளாதார குற்றப்பிரிவு ஆய்வாளா் கயல்விழி, மாநகர குற்றப்பதிவேடு காப்பக ஆய்வாளா் ராஜேந்திரன்,

நுண்ணறிவு பிரிவு (பாதுகாப்பு) முருகவேல், கண்டோன்மென்ட் ஆய்வாளா் சிவகுமாா், மாநகரக் குற்றப்பிரிவு ஆய்வாளா் கோசலைராமன், உறையூா் ஆய்வாளா் ராஜா, ஸ்ரீரங்கம் அனைத்து மகளிா் காவல்நிலைய ஆய்வாளா் வனிதா, மாநகரக் குற்றப்பிரிவு 2-ஆவது பிரிவு ஆய்வாளா் சரஸ்வதி, ஸ்ரீரங்கம் ஆய்வாளா் அரங்கநாதன், காந்திமாா்க்கெட் ஆய்வாளா் ரமேஷ், திட்டமிட்ட குற்றத்தடுப்பு பிரிவு ஆய்வாளா் கருணாகரன், பொன்மலை குற்றப்பிரிவு ஆய்வாளா் காா்த்திக் பிரியா, பாலக்கரை ஆய்வாளா் நிக்ஸன்,

தில்லைநகா் ஆய்வாளா் வேல்முருகன், குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் அஜிம், கோட்டை போக்குவரத்து ஆய்வாளா் மதிவாணன், கண்டோன்மென்ட் போக்குவரத்து ஆய்வாளா் ரமேஷ், ஆயுதப்படை ஆய்வாளா் காா்த்திகேயன் ஆகியோா் திருச்சி சரகத்துக்கும் (புகா் பகுதிகளுக்கும்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

Tags:    

Similar News