கொல்லங்கோடு அருகே நாட்டு வைத்தியரின் உதவியாளர் மர்மசாவு

கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு பகுதியில் நாட்டு வைத்தியரின் உதவியாளர் மர்மான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2024-02-17 07:43 GMT
நாட்டு வைத்தியரின் உதவியாளர் மரணம் 

குமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே கேரளா பகுதியான காரோடு வாழவிளையை சேர்ந்தவர் ஷாஜி (60). இவர் நாட்டு வைத்தியரின் உதவியாளராக உள்ளார்.  இவருக்கு அதிகமாக மதுப்பழக்க இருந்து வந்துள்ளது.  இந்த நிலையில் 14 ஆம் தேதி இரவு சுமார் 12 மணி அளவில் தனது  வீட்டில்  இருந்துள்ளார்.

அதன் பிறகு நேற்று முன் தினம்  காலையில் 5 மணி அளவில் தமிழகப் பகுதியான மங்குழியில் வசித்து வரும் இருசக்கர வாகன ஷோரூம் நடத்தி வரும் பிரதீப் என்ற தொழிலதிபர் வீட்டின் பின்பகுதியில் படுகாயத்துடன் மயக்க நிலையில் ஷாஜி கிடந்துள்ளார்.      

Advertisement

இதை கண்ட பிரதீப் ஷாஜியின் மகன் ஜினோ ஷாஜின் என்பவருக்கு  தொலைபேசி மூலம் தகவல் கொடுத்துள்ளார். உடனே அவரை மீட்டு, நெய்யாற்றின்கரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்துள்ளனர்.  ஆனால் சிகிச்சை பலனின்றி ஷாஜி உயிரிழந்தார்.        

இது குறித்து ஜினோ கொல்லங்கோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, உறவினர்கள் கோரிக்கையின் பேரில்,  உடலை பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News