ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி - காவல்துறையினர் விசாரணை
திருப்பூர் ஊத்துக்குளி விஜயமங்கலம் இடையே ரயிலில் அடிபட்டு வாலிபர் பலியான சம்பவம் தற்கொலையா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-05-14 14:43 GMT
இளைஞர் பலி
திருப்பூர் ஊத்துக்குளி விஜயமங்கலம் இடையே ரெயில் தண்டவாளத்தில் ரெயிலில் அடிபட்டு வாலிபர் இறந்து கிடப்பதாக திருப்பூர் ரெயில்வே போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் இறந்தவர் திருப்பூர் வளையங்காட்டை சேர்ந்த சுரேஷ்குமார் (34) என்பது தெரியவந்தது.
பனியன் நிறுவன தொழிலாளியான இவருக்கு கடன் மற்றும் குடும்ப பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா இல்லை தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.