போலீசார் விசாரணை
அம்மையகரத்தை சேர்ந்த முகமதுஅலி வெளியே சென்றிருந்தபோது, அவரின் வீடு புகுந்து நகை திருடியவர் குறித்து போலீஸ் விசாரனை நடக்கிறது.;
Update: 2023-12-28 02:04 GMT
அம்மையகரத்தை சேர்ந்த முகமதுஅலி வெளியே சென்றிருந்தபோது, அவரின் வீடு புகுந்து நகை திருடியவர் குறித்து போலீஸ் விசாரனை நடக்கிறது.
சின்னசேலம் அடுத்த அம்மையகரத்தை சேர்ந்தவர் முகமதுஅலி,75; சமையல்காரர். கடந்த 11ம் தேதி காலை 9:00 மணியளவில் முகமதுஅலி கள்ளக்குறிச்சிக்கு சென்ற நிலையில், அவரது மகள் ஜெயின்பீ வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுள்ளார். மதியம் 1:00 மணியளவில் முகமதுஅலி வீட்டிற்கு வந்த போது, பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்த நிலையில் இருந்துள்ளது. இதனால் முகமதுஅலி அதிர்ச்சியடைந்து வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். அதில் பீரோவில் இருந்த 10 கிராம் தங்க செயின் காணாமல் போனது தெரிந்தது. இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.