பேரூராட்சி தலைவருக்கு கொலை மிரட்டல் போலீஸ் விசாரணை

கன்னியாகுமரி மாவட்டம் மணவாள குறிச்சியில் பேரூராட்சி தலைவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுள்ளது குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டனர்.;

Update: 2024-05-20 11:57 GMT
பைல் படம்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே அம்மாண்டி விளை பகுதியை சேர்ந்தவர் வினித் பிரியன். ரவுடியான இவர் மீது பல வழக்குகள் உள்ளன. இவரது மனைவி ஜெப பிரியா. வினித் பிரியன் ஒரு பலாத்கார வழக்கில் சிக்கியதால் ஜெபபிரியா கணவரை பிரிந்து  தனது குழந்தையுடன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் மாமியார் வீடு சென்று தகராறில் ஈடுபட்ட விபின் பிரியனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.       

Advertisement

இந்த வழக்கில் ஜாமீனில் வெளிவந்த விபின் பிரியன் தன்னை கைது செய்வதற்கு மணவாள குறிச்சி பேருராட்சி தலைவர் குட்டி ராஜன் தான் காரணம் என நினைத்து அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் போனில் ஆபாசமாக பேசி குட்டி ராஜனுக்கு விபின் பிரியன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பேருராட்சி தலைவர் குட்டி ராஜன் மணவாள குறிச்சி  போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விபின் பிரியனை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News