திருப்பூண்டியில் காவல்துறையினரின் அணிவகுப்பு
நாகப்பட்டினம் 2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு கீழையூர் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட திருப்பூண்டியில் நடைபெற்றது
நாகப்பட்டினம் 2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு . கீழையூர் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட திருப்பூண்டியில் நடைபெற்றது நாகப்பட்டினம் மாவட்டத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் பயமின்றி வாக்களிக்கவும்,
மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், பிரச்சனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இருப்பவர்களை எச்சரிக்கும் விதமாகவும் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் தலைமையில் நாகை மாவட்ட காவல்துறையினர் மற்றும் ஒரிசா மாநில காவல் துறையினர் இணைந்து கொடி அணிவகுப்பு திருப்பூண்டியில் நடைப்பெற்றது. இக்கொடி அணிவகுப்பானது திருப்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி, திருப்பூண்டி கடைத்தெரு வழியை சென்று, திருப்பூண்டி பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்,
நிறைவு பெற்றது மேலும் இவ்வனி வகுப்பில் ஒரிசா காவல்துறையினர், நாகை மாவட்ட தாலுகா காவல்துறையினர், மாவட்ட ஆயுதப்படை காவல்துறையினர்,தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர்,என சுமார் 300 காவல்துறையினர் கலந்து கொண்டனர்.