கன்னியாகுமரி : விடிய விடிய காவல்துறை ரோந்து

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையையோட்டி இரவு நேரங்களில் அதிரடி படை காவலர்கள் ரோந்து பணியில் ஈடுப்பட்டுள்ளதாக எஸ்பி தெரிவித்துள்ளார

Update: 2023-12-24 11:58 GMT
குமரி எஸ்.பி சுந்தரவதனம்.
கிறிஸ்மஸ் ,புத்தாண்டு, பொங்கல் என அடுத்தடுத்த பண்டிகைகள் வரவுள்ளதால்  குமரி மாவட்டத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் ஒட்டி நேற்று இரவு முதல் சிறப்பு ரோந்து பணிகளில் போலீசார் ஈடுபட்டனர். மாவட்ட எஸ் பி சுந்தரவதனமும்,  அதிரடிப்படையுடன் சேர்ந்து ரோந்து  பணியில் ஈடுபட்டார். இந்த ரோந்து பணி இன்றும் நாளையும் நடக்கிறது. நாகர்கோவில், தக்கலை, குளச்சல், கன்னியாகுமரி ஆகிய நான்கு துணை போலிஸ்  சரகங்களிலும்  எக்ஸ்ரே 1, 2, 3 என்ற பெயரில் சிறப்பு ரோந்து படைகள் அமைக்கப்பட்டு ஷிப்ட் முறையில் கண்காணித்து வருகிறார்கள். இது குறித்து சுந்தரவதனம் எஸ்.பி கூறுகையில், குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் பண்டிகைகள்  அடுத்தடுத்து வருவதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குற்ற நடவடிக்கைகளை தடுக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.
Tags:    

Similar News