காவல்துறையினர் தபால் வாக்கு - ஆட்சியர் ஆய்வு

தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் தபால் வாக்கு செலுத்தும் நடைமுறையினை பெரம்பலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கற்பகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

Update: 2024-04-14 02:05 GMT

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் பின்புறம் உள்ள கூட்ட அரங்கில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் தபால் வாக்கு செலுத்துவதற்காக பிரத்தியேகமான தபால் வாக்கு செலுத்தும் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பெரம்பலூர் பராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தலில் பணியாற்ற உள்ள காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையைச் சேர்ந்தவர்கள் தங்களது தபால் வாக்குகளை செலுத்தினார்கள்.

 இதனை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியர் மாநகர கற்பகம் நேரில் பார்வையிட்டார் ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, துணை காவல் கண்காணிப்பாளர் வளவன், மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர்கள் சிவா, பாரதிவளவன், தேர்தல் பிரிவு தனி வட்டாட்சியர் அருளானந்தம், உள்ளிட்| பலர் உடன் இருந்தனர்

Tags:    

Similar News