பல்லடத்தில் செய்தியாளரை வெட்டிய நபர்களுக்கு போலீஸ் மாவு கட்டு.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் காமநாயக்கன்பாளையத்தில் செய்தியாளரை வெட்டிய மர்ம நபர்கள் தப்பி செல்ல முயன்ற போது கால் முறிவு ஏற்பட்டது.
பல்லடத்தில் செய்தியாளரை வெட்டிய நபர்களுக்கு மாவு கட்டு போட்ட போலீஸ். இருவரும் தப்பி செல்ல முயன்ற போது கால் முறிவு. திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலூகாவில் செய்தியாளராக பணிபுரிந்த நேச பிரபு என்பவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிய நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை கங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஐந்து தனிப்படைகள் அமைத்து போலீசார் குற்றவாளிகளை வலை வீசி தேடி வந்த நிலையில் தற்போது பிரவீன், சரவணன் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர், அப்போது ஆயுதங்கள் மற்றும் சம்பவ இடத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அங்கு இருந்து தப்ப முயன்றவர்களை சுற்றி வலைத்தபோது தடுக்கி விழுந்த இருவருக்கும் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் இதனால் தற்போது திருப்பூர் அரசு மருத்துவமனையில் மாவு கட்டு போட்டு சிகிச்சை நடைபெற்று வருகிறது, மேலும் குற்றவாளிகளை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்,