73 ஆண்டுகளாக காவல் நிலையத்திற்கு குடியிருப்பு இல்லை

மயிலாடுதுறை அருகே மணல்மேடு காவல் நிலையம் துவங்கப்பட்டு 73 ஆண்டுகளான நிலையில், காவலர் குடியிருப்பு அமைக்க வேண்டும் என பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Update: 2024-06-16 06:30 GMT

மயிலாடுதுறை அருகே மணல்மேடு காவல் நிலையம் துவங்கப்பட்டு 73 ஆண்டுகளான நிலையில், காவலர் குடியிருப்பு அமைக்க வேண்டும் என பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை உட்கோட்டத்தில் உள்ள மணல்மேடு காவல் நிலையம் கடந்த 1951 ஆம் ஆண்டு மணல்மேடு பட்டவர்த்தி மெயின் ரோட்டில் ஓட்டுக் கட்டிடத்தில் ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வந்தது. 15 5 1999 ல் தற்போது காவல் நிலையம் இயங்கி வரும் கட்டிடத்தை அப்போதைய முதல்வர் கலைஞர் திறந்து வைத்தார். இக்காவல் நிலையத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட காவலர்கள் எண்ணிக்கை ஆய்வாளர் ஒன்று,உதவி ஆய்வாளர் மூன்று, தலைமைக் காவலர் ஐந்து, முதல் நிலைக் காவலர் ஐந்து, காவலர் 38 ஆக கூடுதல் 52 நபர்கள் ஆவார்கள். ஆனால் தற்போது உள்ளது ஆய்வாளர் ஒன்று, உதவி ஆய்வாளர் ரெண்டு, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் 9, தலைமை காவலர்கள் ஏழு, முதல் நிலை காவலர்கள் 10, காவலர்கள் 13 ஆக கூடுதல் 42 நபர்கள். 1951இல் காவல் நிலையம் துவங்கப்பட்டும் 1999இல் புதிய கட்டிடத்தில் காவல் நிலையம் மாற்றப்பட்டும் இன்றளவும் காவலர் குடியிருப்பு கட்டி தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

73 ஆண்டுகளாக காவல் நிலையத்தில் பணி புரியும் காவலர்கள் தனியார் குடியிருப்புகளில் வாடகைக்கு குடியிருந்து பணி செய்து வருகின்றனர். அரசு கொடுக்கின்ற வாடகை படியில் இருந்து வாடகைக்கு குடியிருக்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆய்வாளர் அந்தஸ்துக்கு மேல் உள்ள அதிகாரிகள் அனைவருக்கும் இந்த செய்தி தெரிந்து இருந்தும் கடந்த 73 ஆண்டுகளாக ஆய்வாளர் அந்தஸ்துக்கு கீழ் உள்ள காவலர்களின் நிலை பரிதாபத்துக்குரியதாக உள்ளது. ஆண்டு தோறும் காவல்துறை மானிய கோரிக்கையில் காவல்துறைக்காக பல கோடி செலவு செய்ததாக குறிப்பிடுகின்றார்களே தவிர குடியிருக்க கூட வழியில்லாத நிலையில் வாழும் மணல்மேடு போலீசார்.உலகின் தலைசிறந்த காவல்துறையின் நிலை பரிதாபத்துக்குரியதாக உள்ளது. உடனடியாக காவல்துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

Similar News