ஆன்லைன் மூலம் வேலை வாய்ப்பு நிதி வசதி குறித்த எச்சரிக்கை

ஆன்லைனில் வேலை வாய்ப்பு என ஏமாற்றும் கும்பல் குறித்து பொதுமக்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது

Update: 2024-05-29 11:50 GMT

கோப்பு படம்

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை வேண்டுகோள் பொதுமக்களிடம் மோசடி பேர்வழிகள் பல்வேறு பொய்யான திட்டங்களை அறிவித்து, நம்பிக்கையை ஏற்படுத்தி ஏமாற்றி வருவது தொடர்பாக பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வெளிநாட்டில் வேலை, லட்சக்கணக்கில் சம்பளம் என்று போலியான Travels Agency மூலம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறும் நபரிடம் உங்கள் பணத்தை முதலீடு செய்து ஏமாறாதீர்கள். ➤ Whats app, Instagram, Telegram 4 Part time job தகவல்களை நம்பி அதில் வரும் Link ஐ தொட்டு Investment செய்து பணத்தை இழக்காதீர்கள். குறைந்த வட்டியில் தனிநபர் கடன் என அலைபேசிக்கு வரும் SMS குறுஞ்செய்திகளை நம்பி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம். வங்கி, மற்றும் LIC அலுவலகத்திலிருந்து பேசுவதாக வரும் அழைப்புகளை நம்பி வங்கி கணக்கு Debit card-ன் password மற்றும் Aadhar, Pan card ஆகியவற்றின் எண்களை பகிர்ந்து பணத்தை இழக்காதீர்கள்.

எந்த வங்கியிலும் KYC update விபரம் வாடிக்கையாளர்களிடம் அலைபேசி மூலம் விபரம் கேட்பது இல்லை. பண்டிகை காலத்தின் போது பரிசு விழுந்ததாக வரும் குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம். சலுகை விலையில் பொருட்கள் மற்றும் வாகனங்கள் கிடைக்கும் என்று நிறுவனங்களின் பெயரில் வரும் போலியான செயலிகளை பதிவிறக்கம் செய்து பணத்தை இழக்காதீர்கள். இணைய வழி குற்றம் பற்றி புகார் தெரிவிக்க www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரி அல்லது இலவச தொலைபேசி எண் 1930 என்ற எண்ணிற்கும் புகார் தெரிவிக்கலாம்.

மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கிவரும் இணைய வழி குற்றப் பிரிவு (Cyber Crime) அலைபேசி எண்: 9345881636 என்ற எண்ணிற்கும் புகார் அளிக்க மயிலாடுதுறை மாவட்ட காவல் துறை கேட்டுக்கொள்கிறது.

Tags:    

Similar News