மர்ம நபர்களுக்கு மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!
குழந்தைகள் கடத்தப்படுவதாக தொடர்ந்து மர்ம நபர்கள் வீடியோ பதிவினை வெளியிட்டு வருகிறார்கள்.எனவே பொய்யான வீடியோ அனுப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை.;
By : King 24x7 Angel
Update: 2024-03-02 12:11 GMT
எச்சரிக்கை
திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் மற்றும் பழனியில் குழந்தைகள் கடத்தப்படுவதாக தொடர்ந்து மர்ம நபர்கள் வீடியோ பதிவினை வெளியிட்டு வருகிறார்கள். முற்றிலும் உண்மைக்கு புறம்பான இந்த மாதிரியான பொய்யான வீடியோ பதிவுகளை பதிவிடுவதும், அதனை மற்றவருக்கு அனுப்புவதும் சட்டவிரோதம். எனவே பொய்யான வீடியோ அனுப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இன்று தெரிவித்துள்ளது.