சிவகங்கையில் தபால் வாக்களித்த காவலர்கள்
சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் காவலர்கள் தபால் வாக்களித்தனர்.
Update: 2024-04-12 13:33 GMT
தமிழகத்தில் வருகின்ற 2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் பணிபுரியும் பிற மாவட்டத்தை சேர்ந்த காவலர்கள் தபால் வாக்கு கேட்டு சுமார் 470 காவலர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் இன்று காவலர்கள் ஆட்சியரகப் பகுதியில், காலை 8 மணி முதல் வாக்குப்பதிவை தொடங்கி, மைய அதிகாரி பத்மநாபன் கண்காணிப்பில், பூட்டி சீல் வைக்கப்பட்டிருந்த பிரத்யேக பெட்டியில் காவலர்கள் தபால் வாக்குகளை பதிவு செய்தனர். இதில் ஏராளமான தேர்தல் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.