போலியோ சொட்டு மருந்து முகாம் - அமைச்சர்கள் துவங்கி வைத்தனர்
திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை அமைச்சர்கள் துவங்கி வைத்தார்.
Update: 2024-03-03 18:17 GMT
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் முகாமை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட சுகாதார பணிகள் உதவி இயக்குனர் பொற்செல்வன், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைத்து நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி தலைமையில் அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருத்தை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை முதல்வர் சிவக்குமார், மருத்துவர்கள் சைனஸ், குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 1222 போலியோ சொட்டுமருந்து மையங்களில் 5379 பணியாளர்களை கொண்டு 1,34,199 (ஒரு இலட்சத்து முப்பந்நான்கு ஆயிரத்து நூற்று தொன்னுற்று ஒன்பது) குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடு செய்ய்பட்டுள்ளது. என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார். இதே போல தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்துகொண்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் முகாமை துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சுகாதார குழு தலைவர் எஸ் சுரேஷ்குமார், நகர் நல அலுவலர் சுமதி, உதவி ஆணையர் தனசிங், முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவீந்திரன், மேயர் நேர்முக உதவியாளர்கள் ரமேஷ், ஜெஸ்பர், பிரபாகர், மற்றும் மாமன்ற உறுப்பினர் தெய்வேந்திரன், திமுக தொழிற்சங்க மின்வாரிய தலைவர் பேச்சி முத்து கலந்து கொண்டனர். போலியோ சொட்டு மருந்து வழங்கிய அனைத்து குழந்தைகளுக்கும் மேயர் ஜெகன் பெரியசாமி குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மைகள் வழங்கினார். அப்போது அனைவரும் ஆறு வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் மறவாமல் போலியோ சொட்டு மருந்தை கொடுத்து போலியோ இல்லாத ஒரு மாநகரத்தை உருவாக்கும் என உறுதி ஏற்ப்போம் என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.