வாக்குச்சாவடி அலுவலர் பயிற்சி - ஆட்சியர் துவக்கி வைப்பு
நாகப்பட்டினம் மக்களவை தொகுதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவின் படி பாராளுமன்ற தேர்தல் 19.04 2024 அன்று தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. 29 நாகப்பட்டினம்(தனி) பாராளுமன்ற தொகுதியில் 163.நாகப்பட்டினம், 164.கீழ்வேளூர் (தனி) மற்றும் 165.வேதாரணயம் ஆகிய 03 சட்டமன்ற தொகுதிகளும், திருவாரூர் மாவட்டத்தின் 166.திருத்துறைப்பூண்டி(தனி). 168.திருவாரூர். 160.நன்னிலம் ஆகிய 03 சட்டமன்ற தொகுதிகளும் ஆக மொத்தம் 06 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளது.
இத்தேர்தல் பணியில் சுமார் 7500 அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 29.நாகப்பட்டினம்(தனி) பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 163.நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் 220 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களுக்கு 1240 வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். இவ்வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதல்கட்டமாக பயிற்சி தனியார் பள்ளியில் அளிக்கப்படுகிறது.
164.கீழ்வேளூர்(தனி) சட்டமன்ற தொகுதியில் 203 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களுக்கு 877 வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். இவ்வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதல்கட்டமாக பயிற்சி தனியார் பள்ளியில் அளிக்கப்படுகிறது. 165.வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் 227 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களுக்கு 1077 வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். இவ்வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதல்கட்டமாக பயிற்சி வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இப்பயிற்சி வகுப்பில் வாக்குபதிவு நாளுக்கு முந்தையநாள் மேற்க்கொள்ளபட வேண்டிய பணிகள், வாக்குச்சாவடிக்கு உள்ளே, வெளியே மேற்க்கொள்ளப்பட வேண்டிய பணிகள், வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு துவங்குவதற்க்கு முன்பாக செய்யவேண்டிய பணிகள். வாக்குப்பதிவின்போது செய்யவேண்டிய பணிகள், வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் அலுவலர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளும்முறை, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்முறை ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் பேபி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்/வருவாய் கோட்டாட்சியர் கோ.அரங்கநாதன், முதுநிலை மண்டல மேலாளர் .சிவப்பிரியா, மாவட்ட முதன்மைக்கல்வி சுபாஷினி கலந்து கொண்டனர்