கே.ஆர்.பி அணையில் மாசு கட்டுப்பாடு அதிகாரிகள் ஆய்வு

கேஆர்பி அணையில் மீன்கள் செத்து மிதந்தை தொடர்ந்து மாசுக்கட்டுப்பாடு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்

Update: 2024-05-25 09:56 GMT

கேஆர்பி அணையில் ஆய்வு

 கிருஷ்ணகிரி கே. ஆர். பி. அணையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டன் கணக்கான மீன்கள் செத்து மிதந்தது. அதனால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டதை தொடர்ந்து அணையை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய தலைமை அலுவலகத்தின் இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர், பழனிச்சாமி உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் முரளிதரன் மற்றும் தலைமை விஞ்ஞான அலுவலர் வடிவு தலைமையில் ஆய்வுக்குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வில் அணையில் உள்ள நீரில் பிராணவாயு குறைந்த காரணத்தினால் மீன்கள் செத்து மிதந்து ஏற்கனவே செத்து மிதந்துள்ளார் மீன்களை மீன்வளத்துறை மூலம் அகற்றி அளிக்கப்பட்டது மேலும் நீரில் கரைந்துள்ள பிராணவாயு இருப்பது கண்டறியப்பட்டது இக்குழுவானது அலையில் சுற்றிலும் ஐந்து இடங்களில் நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்திற்கு பகுப்பாய்விற்காக அனுப்பப்பட்டது மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்

Tags:    

Similar News