மின்சாரம் தாக்கி பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் பலி

தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2024-05-18 12:38 GMT
மின்சாரம் தாக்கி பலி 

தூத்துக்குடி பி அன்டு டி காலனி 10வது தெருவைச் சேர்ந்தவர் மணி மகன் முத்துசாமி என்ற சந்தோஷ் (19). இவர் தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் நண்பர்களுடன் சேர்ந்து செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது பைக் சத்தம் கேட்கவே வீட்டின் உரிமையாளர் வந்துவிட்டதாக கருதி அவசரமாக கீழே இறங்க முற்பட்டுள்ளார். அப்போது அவ்வழியே சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் அவரது கை உரசியதால் உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News