அறம் லயன்ஸ்சங்கம் சார்பில் பார்வையற்றோர்கள் பொங்கல் விழா
புதுக்கோட்டையில் அறம் லயன்ஸ் சங்கம் சார்ப்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஏராளமான பார்வையற்றவர்கள் பங்கேற்று விழாவை கொண்டாடினர்.
புதுக்கோட்டையில் அறம் லயன்ஸ்சங்கம் சார்பில் பார்வையற்றோர்கள் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் பார்வையற்றோர்களுக்கு பொங்கல், வேஷ்டி ,சேலை, வழங்கப்பட்டன. புதுக்கோட்டை டவுன்ஹாலில் நடைபெற்ற விழாவிற்கு அறம் லயன் சங்கத்தின் தலைவர் அரவிந்த் தலைமை வகித்தார், அறம் லயன் சங்கத்தின் செயலாளர் பிரபு முன்னிலை வகித்தார், அறம் லயன் சங்கத்தின் பொருளாளர் சந்திரசேகர் அனைவரையும் வரவேற்றார், இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசன் பங்கு பெற்றார். முன்னதாக அடுப்பில் பொங்கல் பானை வைத்து பால் ஊற்றி பச்சரிசியுடன் பொங்கல் வைத்த பெண்கள் பின்னர் வாழை இலையில் பொங்கல் கரும்பு வாழைப்பழம் தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனர்.
இதனை அடுத்து பார்வையற்றவர்களுக்கு புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசன் பொங்கல் வேஷ்டி சேலை ஆகியவற்றை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட பார்வையற்றவர்கள் கலந்து கொண்டு பரிசினை வாங்கி சென்றனர். பின்பு இது குறித்து அறம் லயன் சங்கத்தின் தலைவர் அரவிந்த் தெரிவிக்கையில் கண் தெரிந்தவர்களே எவ்வளவு கஷ்டமான சூழ்நிலையில் வாழ்ந்து வரும் போது கண் தெரியாதவர்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் ஆகவே அவர்களை கொண்டு இந்த பொங்கல் விழாவை நடத்தியுள்ளோம் என தெரிவித்தனர்.
பின்னர் பார்வையற்ற மறுமலர்ச்சி சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆரோக்கியதாஸ் பேசுகையில் கண் தெரியாத எங்களுக்கு அலுவலகம் நடத்துவதற்கு இடம் ஒன்று தேவை அதேபோல் பார்வையற்றோர் எங்களுக்கு நிரந்தரமாக குடியிருக்க அரசாங்கம் இடம் தர வேண்டும் பலமுறை ஆட்சி நடத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை அதேபோல் எங்கள் குழந்தைகள் படிப்பதற்கு நிதி உதவி செய்ய வேண்டுமென அரசனை கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் அறம் லயன்ஸ் சங்கத்தின் பொறுப்பாளர்கள், திமுக நகர செயலாளர் செந்தில் மற்றும் உறுப்பினர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.