பொங்கல் பானை விற்பனை தீவிரம்

குமாரபாளையத்தில் பொங்கல் பண்டிகை நெருங்குவதால் பொங்கல் பானை விற்பனை தீவிரமடைந்துள்ளது.

Update: 2024-01-07 08:43 GMT

கலர் கலராய் மின்னும் பொங்கல் பானைகள்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் திருச்செங்கோடு சாலையில், பொங்கல் பண்டிகையை ஒட்டி தற்காலிக சாலையோர பொங்கல் மண்பானை விற்பனை செய்யும் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது .

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ளதால் ,தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை விமர்சையாக கொண்டாடும் வகையில் "பல வடிவங்களில் வண்ணங்கள் தீட்டப்பட்ட பொங்கல் பானைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது . இது குறித்து பொங்கல் பானை விற்பனையாளர்கள் கூறும் பொழுது, பொங்கல் பண்டிகை ஒட்டி பல்வேறு வடிவங்களில் பொங்கல் பானைகளை விற்பனைக்கு வைத்துள்ளோம்.

சிறிய அளவிலான வண்ணம் தீட்டப்பட்ட பானை 200 ரூபாய் முதல் ஐந்து படி அரிசி போடும் பொங்கல் பானை சுமார் 800 முதல் 900 ரூபாய் வரையிலும் விலை வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது சீசன் காலம் என்பதால் பல வகையான வண்ணங்களை பானைகளுக்கு தீட்டி விற்பனை செய்து வருகிறோம்.

அது மட்டும் இன்றி மண் உண்டியல், பூந்தொட்டி ,குருவி அடை காக்க பயன்படுத்தும் பானை, மண் அடுப்பு, மண் சட்டி,அகல்விளக்கு என பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தக் கூடிய சிறியது முதல் பெரிய வகையிலான பல்வேறு மண் சார்ந்த பொருட்களை விற்பனைக்கு வைத்துள்ளோம்.. இந்த பொங்கல் பானைகள் முன்பு பல்வேறு மாவட்டங்களில் கிராமப்புற பகுதிகளில் எளிதாக வாங்கி வந்து விற்பனை செய்து வந்தோம்.

தற்போது பொங்கல் பானை தயாரிப்பாளர்கள் வெகுவாக குறைந்து விட்டதால், ஊரில் ஒரு சிலர் மட்டுமே உள்ளதால், டிமாண்ட் அதிகரித்துள்ளதால் விளையும் சற்று அதிகரித்து உள்ளது . கடந்த ஆண்டு காட்டிலும் இந்த ஆண்டு பொங்கல் பானை 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை கூடுதல் விலை வைத்து விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது... திருச்சி உள்ளிட்ட பல்வேறு கிராமப்புற மாவட்டங்களில், உள்ள ஒரு சில மண்பானை தயாரிப்பாளர்களிடம் இருந்து மொத்தமாக வாங்கி விற்பனை செய்து வருகிறோம்.

பானை விற்பனை இந்தாண்டு சிறப்பானதாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

Tags:    

Similar News