பத்ரகாளி அம்மன் கோவிலில் பொங்கல் வழிபாடு
கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் பத்தாமுதைய பொங்கல் வழிபாட்டில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
Update: 2024-04-24 10:48 GMT
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு வட்டவிளை மூலஸ்தான கோவிலில் நேற்று காலை வழக்கமான பூஜைகளை தொடர்ந்து பெண்கள் குரவையிட காலை கோவில் தந்திரி தலைமையில் பண்டாரஅடுப்பில் தீ மூட்டப்பட்டது. தொடர்ந்து பெண்கள் பொங்கலிட்டனர். அதைத் தொடர்ந்து லட்சார்ச்சனை நடந் தது. இதில், ஆயிரக்கணக்கானோர் கலந்துநகொண்டனர்.பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு இருந்தது. பக்தர்கள் வருகையை ஒட்டி கொல்லங்கோடு காக்கவிளை தடத்தில் கனரகவாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு தலைவர் வழக்கறிஞர் ராமச்சந்திரன் நாயர், செயலாளர் மோகன் குமார், பொருளாளர் ஸ்ரீனிவாசன் தம்பி,துணைத்தலைவர் சதிகுமாரன் நாயர், இணைச் செயலாளர் பிஜு குமார் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்