பொன்னமராவதி: தாழ்ப்பா கண்மாயில் மீன்பிடித் திருவிழா
பொன்னமராவதி அருகே உள்ள தாழ்ப்பா கண்மாயில் நடந்த மீன்பிடித் திருவிழாவில் கிராம மக்கள் ஜாதி, மத பேதமின்றி கலந்து கொண்டு மீன் பிடித்தனர்.
Update: 2024-04-28 08:57 GMT
பொன்னமராவதி வட்டாரத்தில் கோடைகாலத்தில், விவசாய கண்மாய்களில் நீர்மட்டம் குறையும் நிலையில் மழை பெய்யவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி, ஜாதி, மத பேதமின்றி மீன்பிடித் திருவிழா நடைபெறும். இதன்படி, பொன்னமராவத அருகே உள்ள தாழ்ப்பா கண்மாயில் நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவை முன்னாள் பேரூராட்சித் தலைவர் ஆர்எம். ராஜா தொடங்கிவைத்தார். இதில், கூடை, வலை, ஊத்தா, கச்சா, பரி உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களுடன் கண்மாயில் இறங்கிய சுற்றுவட்டார கிராம மக்கள், பல்வேறு வகை மீன்களை ஆர்வமுடன் பிடித்துச் சென்றனர்.