பொன்னேரி : பாஜக வேட்பாளர் அறிமுக கூட்டம்

பொன்னேரி அருகே அமமுக சார்பில் திருவள்ளூர் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-03-27 03:28 GMT

 வேட்பாளர் அறிமுக கூட்டம் 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தச்சூர் கூட்டு சாலையில் அமைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட அலுவலகத்தில் திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பொன் பாலகணபதி அறிமுக கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக செயலாளர் பி.வி. சங்கர் ராஜா தலைமையில் நடைபெற்றது.

மாலை 6 மணி அளவில் மாவட்ட அலுவலகத்திற்கு வருகை புரிந்த வேட்பாளர் பொன் பாலகணபதிக்கு கட்சியின் நிர்வாகிகளின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நிர்வாகிகளின் மத்தியில் வேட்பாளரை அறிமுகப்படுத்தி மாவட்ட கழக செயலாளர் சங்கர்ராஜா சிறப்புரை ஆற்றினார் அதனைத் தொடர்ந்து அனைத்து பொறுப்பாளர்களும் சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். அப்பொழுது நிர்வாகிகளின் மத்தியில் பேசிய பிஜேபி வேட்பாளர் பொன் பாலகணபதி ஜனநாயக கூட்டணியில் அங்கம்வகிக்கும் அமமுக நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்த தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

Tags:    

Similar News