பூங்காவனத்தம்மன் தேர் திருவிழா கோலாகலம்
திருவண்ணாமலை மாவட்டம், கல்வாசல் கிராமத்தில் பூங்காவனத்தம்மன் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
Update: 2024-03-24 12:21 GMT
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த கல்வாசல் கிராமத்தில் பூங்காவனத்தம்மன் தேர் திருவிழா நடைபெற்றதை முன்னிட்டு காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
பிற்பகலில் அலங்கரிக்கப்பட்ட பூங்காவனத்தம்மன் தேர் திருவிழா நடைபெற்றது. பொதுமக்கள் தேங்காய் உடைத்து கற்பூர தீபாராதனை செய்து வழிபாடு செய்தனர்.இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழு தலைவர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.