பூந்தமல்லி சிறை கைதி மருத்துவமனையில் இறப்பு
பூந்தமல்லி சிறை கைதி உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் இறப்பு.;
Update: 2024-03-18 01:32 GMT
உயிரிழப்பு
பூந்தமல்லி கன்டோன்மென்ட் பகுதியைச் சேர்ந்தவர் காதர் பாட்ஷா, 22. கஞ்சா விற்பனை வழக்கில் கடந்த மாதம் கைதாகி, பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், கடந்த 13ம் தேதி காதர் பாஷாவுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. இதை அடுத்து, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று உயிரிழந்தார். இது குறித்து பூந்தமல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.