பூந்தமல்லி ஒன்றியக்குழு கூட்டம்
பூந்தமல்லி ஒன்றியக்குழு கூட்டத்தில் பாரிவாக்கம் ஏரியை தூர்வாரி, உபரி நீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளது.
பூந்தமல்லி ஒன்றியம் பாரிவாக்கம் ஊராட்சியில் உள்ள பாரிவாக்கம் ஏரியை தூர்வாரி உபரி நீர் வெளியேறும் வகையில் கல்வெட்டுகள் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
மேலும் அதிமுக காட்டுப்பாக்கம் ஒன்றிய கவுன்சிலரும் பூந்தமல்லி கிழக்கு ஒன்றிய கழக செயலாளருமான கே.ஜி.டி. கவுதமன் தனது ஊராட்சிக்கு வந்த சி.எம்.டி.ஏ. நிதி ரூ.1 கோடியை வேறு ஊராட்சிகளுக்கு அனுப்பி வைத்ததால் தங்களது ஊராட்சியில் பணி செய்யாமல் பாதிக்கப்பட்டதாகவும் இனிவரும் காலங்களில் காட்டுப்பாக்கம் ஊராட்சிக்கு வரும் சி.எம்.டி.ஏ. நிதியை அதிகாரிகள் வேறு ஊராட்சிக்கு மாற்றினால் அதிகாரிகள் மீது வழக்கு தொடர்வேன் என அதிமுக காட்டுப்பாக்கம் ஒன்றிய கவுன்சிலரும் பூந்தமல்லி கிழக்கு ஒன்றிய கழக செயலாளருமான கே.ஜி.டி. கவுதமன் கூறியதால் ஒன்றிய குழு கூட்டத்தில் அரசு அதிகாரிகள் ஒரு நிமிடம் உறைந்து போய் நின்றதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஒன்றிய குழு கூட்டத்தில் கழக ஒன்றிய கவுன்சிலர் கண்ணன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.