விருதுநகரில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்க செயற்குழு கூட்டம்

விருதுநகரில் நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பாக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.;

Update: 2024-01-29 10:53 GMT
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

 விருதுநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பாக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் மாநில தலைவர் இராமு அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

அப்போது பேசிய அவர் கடந்த 1-4-2003 க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு நடைமுறையில் இருக்கும் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்,

ஜேக்டோ - ஜியோ சார்பாக நடைபெறும் அனைத்து போராட்டங்களிலும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும், காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண்டர் மற்றும் உயர்கல்வித் தகுதிக்கான ஊக்க ஊதிய உயர்வினை உடனே வழங்க வேண்டும்,

சமீபகாலமாக மாணவர்கள் ஆசிரியர்களைத் தாக்கம் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று கொண்டே இருக்கிறது. அதனைத் தடுக்க தமிழக அரசு ஆசிரியர்களுக்கென்று தனியாக பணிப்பாதுகாப்பு சட்டத்தினை உடனடியாக கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.

  மேலும் இந்த நிகழ்வில் மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் பேட்டி: ஆ. இராமு - மாநில தலைவர

Tags:    

Similar News