வாக்கு எண்ணிக்கைக்கு அனுப்பபட்ட தபால் வாக்குகள்

தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தபால் ஓட்டுக்கள் அடங்கிய பெட்டிகள் வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் சென்றனர்.

Update: 2024-06-04 01:55 GMT

வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட தபால் ஓட்டு பெட்டிகள் 

தென்காசி மக்களவை தேர்தல் கடந்த 19ம் தேதி நடந்து முடிந்த நிலையில் தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் தபால் வாக்குகள் செலுத்திய வாக்குகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போலீசார் பாதுகாப்புடன் அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் கமல் கிஷோர் தலைமையில் திமுக அதிமுக பாஜக, நாம் தமிழர் கட்சி கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்ட அறை திறக்கப்பட்டு அங்கு இருந்து பதிவான 21வாக்கு பெட்டிகளை போலீசார் பலத்த பாதுகாப்புடன் வாக்கு என்னும் மையமான கொடிக்குறிச்சி-ஆய்குடி செல்லும் சாலையில் உள்ள யுஎஸ்பி கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அங்கு மீண்டும் முகவர்கள் முன்னிலை வாக்குபெட்டிகள் வைக்கப்பட்ட தனி அறையில் சீல் வைக்கப்படும் பின்னர் இன்று காலை மீண்டும் முகவர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு முதலாவதாக தபால் ஓட்டுக்கள் எண்ணப்படும். மேலும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்றடுக்கு போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை தினத்தன்று வாக்கு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதிகள் மாவட்டத்தில் உள்ள பிரதான பகுதிகளில் காவல்துறை சார்பில் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். குடிநீர், சுகாதாரம், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட இதர வசதிகளும் வாக்கு எண்ணுகை மையத்தில் விரிவான முறையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் தொடர்பான தகவல்களை வழங்க தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் தொடர்பான தகவல்களை பொது மக்கள் 1950 என்ற எண்ணில் தொடர்புகொண்டு அறிந்து கொள்ளலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News