குமரியில் வெளிமாவட்ட  அரசு ஊழியர்களுக்கான தபால் வாக்கு பதிவு

குமரியில் வெளிமாவட்ட  அரசு ஊழியர்களுக்கான தபால் வாக்கு பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

Update: 2024-04-13 12:51 GMT

தபால் வாக்கு செலுத்திய அலுவலர்கள்

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பொதுத்தேர்தல் மற்றும்  விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள அரசு ஊழியர்களுக்கான வாக்கு பதிவு  இன்று (13.04.2024) மற்றும் 14.04.2024 ஆகிய தேதிகளில்  கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கான வசதி மையம் புனித ஜோசப் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி,

ஆசாரிபள்ளம், நாகர்கோவிலிலும்,  நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்கான வசதி மையம் அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, யு.சு. கேம்ப் ரோடு, நாகர்கோவிலிலும்,   

குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கான வசதி மையம் புனித சேவியர் பொறியியல் கல்லூரி சுங்கான்கடையிலும்,  பத்மனாபபுரம் சட்டமன்ற தொகுதிக்கான வசதி மையம் எக்ஸல் சென்ட்ரல் பள்ளி, திருவட்டாரிலும்,         விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான  வசதி மையம் சேக்ரட் ஹார்ட் இன்டர்நேஷனல் பள்ளி பம்மம், மார்த்தாண்டத்திலும்,  கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கான வசதி மையம் பெத்லகேம் பொறியியல் கல்லூரி, கருங்கலிலும் இன்று தபால் வாக்குப்பதிவுகள் நடைபெற்று வருகிறது. 

     மேலும் பிற மாவட்டங்களில் வாக்குரிமை பெற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பணிபுரிகின்ற அரசு ஊழியர்கள் புனித ஜோசப் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி ஆசாரிபள்ளம்,  நாகர்கோவிலில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட வசதி மையத்தில் தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றன.      

வாக்குபதிவை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் இன்று நேரில்  பார்வையிட்டார்.        இந்நிகழ்ச்சியில்   மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்ரமணியம் உள்ளிட்ட  அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

Tags:    

Similar News