தபால் வாக்குப்பதிவு தொடக்கம் - கலெக்டர் பார்வையிட்டார்
குளச்சலில் நடைபெற்ற தபால் வாக்குபதிவை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.;
கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து அவர்கள் தங்கள் வீடுகளிலேயே தபால் வாக்குப்பதிவு செய்ய இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் மாவட்டத்தில் 85 வயதுக்கு மேற்பட்டோர் மொத்தம் 3982 வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை தபால் வாக்களிக்க பதிவு செய்திருந்தார்கள். மாற்றுத்திறனாளிகள் மொத்தம் 2546 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை தபால் வாக்களிக்க பதிவு செய்திருந்தார்கள்.
மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு முதற்கட்டமாக ஏப்ரல் 8, 9 மற்றும் 10 தேதியும் தபால் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இன்று (08.04.2024) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை தபால் வாக்குப்பதிவுகள் நடைபெறுகிறது. இதில் குளச்சல் பகுதியில் நடந்த வாக்குபதிவை கலெக்டர் பார்வையிட்டார். நடைபெற்ற வாக்குப்பதிவின் போது உதவி தேர்தல் அலுவலர் கனகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.