அரக்கோணத்தில் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குப்பதிவு தொடக்கம்!

அரக்கோணம் தொகுதியில் முதியோர்கள் மற்றும் மாற்று திறனாளிகள் தபால் வாக்குப்பதிவு நடந்ததை தேர்தல் நடத்தும் அலுவலர் வளர்மதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2024-04-06 04:31 GMT

அரக்கோணம் தொகுதியில் முதியோர்கள் மற்றும் மாற்று திறனாளிகள் தபால் வாக்குப்பதிவு நடந்ததை தேர்தல் நடத்தும் அலுவலர் வளர்மதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 85 வயதுக்கு மேற்பட்ட மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தவறாமல் தங்களுடைய வாக்கினை பதிவு செய்வதற்கான பணி தொடங்கப்பட்டுள்ளது.அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் 15,978 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 14,391 வாக்காளர்களுக்கு கடந்த வாரம் படிவம் 12டி வழங்கப்பட்டது. அவர்களில் 1,122 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் விருப்பம் தெரிவித்திருந்தனர்.

அவர்களில் தபால் வாக்குகள் பதிவு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல 85 வயது நிரம்பிய 14,035 மூத்த வாக்காளர்களில் 10,597 வாக்காளர்களுக்கு 12டி படிவங்கள் வழங்கப்பட்டு 1,184 பேர் மட்டும் வீட்டிலிருந்தபடியே தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்திருந்தனர். இவர்களிடமும் தபால் வாக்குகள் பெரும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

ஆற்காடு நகராட்சி 8-வது வார்டு, மறைமலை அடிகளார் தெருவில் உள்ள அனந்த கிருஷ்ணன் (வயது 88) என்ற முதியவர் தன்னுடைய வாக்கை வீட்டில் இருந்தபடியே பதிவு செய்து வாக்கு பெட்டியில் போட்டார். அதேப்போன்று சக்கரமல்லூர் ஊராட்சி, அண்ணாநகர் பகுதியில் மாற்றுத்திறனாளி வாக்காளர் பச்சையப்பன் (36) மற்றும் வேப்பூர் ஊராட்சி, அம்பேத்கர் தெருவில் சக்குபாய் (86), அதே வீட்டில் மாற்றுத்திறனாளி பாலாஜி (45), வேப்பூர் பெரிய தெருவில் பிரேமா (52) என்ற மாற்றுத்திறனாளி ஆகியோர் தங்கள் வீட்டில் இருந்தபடியே வாக்குப்பதிவு செய்தனர்.

இதனை ராணிப்பேட்டை தேர்தல் நடத்தும் அலுவலர் வளர்மதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ந.சுரேஷ், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஏகாம்பரம், தாசில்தார் அருள்செல்வன், வெங்கடேசன் மற்றும் தேர்தல் பணி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News