பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் தபால் வாக்குகள்

பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் மாற்றுத்திறனாளிகள் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் தபால் வாக்குகள் அளித்தனர்.

Update: 2024-04-06 00:34 GMT

பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் மாற்றுத்திறனாளிகள் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் தபால் வாக்குகள் அளித்தனர்.


மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் அவர்களது வீடுகளில் இருந்து தபால் வாக்கு செலுத்தும் பணிகள் தொடர்பாக பாபநாசம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துகிருஷ்ணன் பாபநாசம் வட்டாட்சியர் மணிகண்டன் ஆகியோர் அரையபுரம் கிராமத்தில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது மண்டல அலுவலர்கள் குமரேசன் தாரா கிராம நிர்வாக அலுவலர் காயத்ரி மற்றும் காவலர்கள் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News